Naane Varuven D Logo Top

துபாயின் வரலாற்றுல இவ்வளவு தொகைக்கு யாரும் வீடு வாங்குனது இல்ல.. உலக பணக்காரர்களையே திகைக்க வச்ச மர்ம நபர்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Oct 03, 2022 03:00 PM

துபாயில் ஒரு சொகுசு வீடு மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இன்றைய தினத்தில் துபாயில் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட வீடு இதுதானாம்.

Dubai sale of Palm Jumeirah Mansion for 82 million USD

Also Read | "உங்களை மாதிரி ஆகணும்.. சீக்ரட்டை சொல்லுங்க".. கேள்வி கேட்ட நெட்டிசன்.. ஒரே வார்த்தைல மஸ்க் கொடுத்த ரிப்ளை..!

துபாயில் வெளிநாட்டு மக்கள் குடியேறுவதை அதிகரிக்கும் நோக்கில் பல திட்டங்களை துபாய் அரசு மேற்கொண்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்னர் துபாயின் ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை தலைவருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் கோல்டன் விசாவை அறிமுகப்படுத்தினார் இதன்மூலம் உலகளவில் தொழிலதிபர்கள், கலை, அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல, துபாயில் உள்ள சொகுசு வில்லாக்களை வெளிநாட்டினருக்கு விற்கவும் ஆர்வம்காட்டி வந்தது துபாய் அரசு.

Dubai sale of Palm Jumeirah Mansion for 82 million USD

அம்பானி

அந்த வகையில், உலக பணக்கரர்களில் ஒருவரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது மகன் ஆனந்த் அம்பானிக்கு துபாயில் சொகுசு வீடு ஒன்றை வாங்கியிருந்தார். இதன் விலை 80 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 640 கோடி ரூபாய்) என தகவல்கள் வெளியானது. இதுவே துபாய் வரலாற்றில் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட சொகுசு விடுதியாக இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த சாதனையை முறியடித்திருக்கிறார் ஒருவர்.

புதிய சாதனை

காசா டெல் சோல் (Casa Del Sole) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சொகுசு வீட்டை Alpago Properties எனும் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த வீட்டை கடந்த ஜூலை மாதம் விற்பனை செய்ததாக அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது. இருப்பினும் இந்த சொகுசு வீட்டை வாங்கியவரின் விபரத்தை அந்நிறுவனம் வெளியிட மறுத்துவிட்டது. மேலும், அந்நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி இந்த வீடு 82.4 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 674 கோடி) விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த சொகுசு வீட்டை வாங்கியது யார்? என்ற கேள்வி உலக அளவில் எழுந்திருக்கிறது.

Dubai sale of Palm Jumeirah Mansion for 82 million USD

காசா டெல் சோல் வில்லாவில் இன்னும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இப்பணிகள் நிறைவடையும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வீட்டினுள், 8 படுக்கை அறைகளும் 18 பாத்ரூம்களும் இருக்கின்றன. அதுமட்டும் அல்லாமல், உடற்பயிற்சி கூடம், சினிமா ஹால், ஜக்குஸி மற்றும் 15 வாகனங்களுக்கு ஏற்ற பேஸ்மென்ட் கார் பார்க்கிங் ஆகியவையும் இங்கே இருக்கின்றன. Alpago Properties கட்டிய ஆறு வில்லாக்களில் இதுவும் ஒன்றாகும். இதுகுறித்து முன்னர் பேசியிருந்த நிறுவனத்தின் தலைவர் முராத் அயில்டிஸ்,"நாங்கள் ஆறு வில்லாக்களை கட்டினோம். அவை அனைத்தும் விற்கப்பட்டுவிட்டன. இதில் 128 மில்லியன் திர்ஹம்ஸ் தொகைக்கு விற்கப்பட்டதே மிகக்குறைவான விலையாகும்" என்றார்.

Also Read | 600 கிலோ.. 6 நொடி.. தர்க்கப்பட்ட பிரம்மாண்ட பாலம்.. திகைக்க வைக்கும் வீடியோ..!

Tags : #DUBAI #PALM JUMEIRAH MANSION #SALE OF PALM JUMEIRAH MANSION #PALM JUMEIRAH VILLAS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dubai sale of Palm Jumeirah Mansion for 82 million USD | India News.