Valimai BNS

நாம இதை நம்பி இருக்குற தைரியத்துலதான் புதின் அப்படி பண்றாரு.. இனி என்ன பண்றார்னு பாப்போம்.. இங்கிலாந்து பிரதமர் அதிரடி..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Feb 24, 2022 07:54 PM

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இங்கிலாந்து பிரதமர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

Boris Johnson said Russian President Vladimir Putin was dictator

உக்ரைன்

முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ என்றா அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதனால் உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1 லட்சம் படை வீரர்களை ரஷ்யா குவித்தது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் மீது தாக்குதல் நடத்தலாம் என அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் தொடர்ந்து எச்சரித்து வந்தன.

ரஷ்யா

இந்த நிலையில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த இன்று (24.02.2022) ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ரஷ்ய படைகள் உக்ரைன் நகரங்களில் குண்டுமழை பொழிந்து வருகின்றன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா தீவிரம் காட்டி வருகிறது.

போரிஸ் ஜான்சன்

இந்த நிலையில், உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ‘ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு பயப்படமாட்டோம். இங்கிலாந்து தொடர்ந்து உக்ரைனுக்கு துணை நிற்கும்.

பொருளாதாரத் தடை

ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் மிகப்பெரும் பொருளாதாரத் தடையை விதிக்க முடிவெடுத்திருக்கிறோம். மேற்கு ஐரோப்பிய நாடுகளின் அரசியலில் புதின் ஆதிக்கம் செலுத்த காரணம், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை நம்பி நாம் இருப்பதுதான். அதை முற்றிலும் நிறுத்த வேண்டும்’ போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க ஆரம்பித்ததும் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #BORISJOHNSON #VLADIMIRPUTIN #UKRAINERUSSIACRISIS

மற்ற செய்திகள்