‘விபரீத விளையாட்டு’.. ‘நொடியில் நடந்த கோரவிபத்து’.. அதிர்ச்சியை ஏற்படுத்திய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Jul 24, 2019 12:54 PM

போலந்தில் பங்கி ஜம்ப் என்னும் விளையாட்டின் போது கயிறு அறுந்து இளைஞர் கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WATCH: Man breaks spine after Bungee jumping in Poland

போலந்து நாட்டில் ஜிடினியா என்னும் இடத்தில் பங்கி ஜம்ப் என்ற கயிற்றை காலில் கட்டி தலைகீழாக குதிக்கும் விளையாட்டு ஒன்று நடைபெற்றுள்ளது. அப்போது அங்கே இருந்த இளைஞர் ஒருவர் இந்த விளையாட்டில் பங்கேற்றுள்ளார். கிரேன் மூலம் சுமார் 330 அடி உயரம் சென்றுள்ளனர். பின்னர் காலில் கயிற்றை கட்டி தலைகீழாக குதித்துள்ளார்.

அப்போது எதிர்பாரத விதமாக காலில் கட்டியிருந்த கயிறு அவிழ்ந்துள்ளது. இதனால் அந்த இளைஞர் அப்படியே கீழே விழுந்துள்ளார். கீழே காற்று நிரப்பட்ட ராட்சத பை இருந்ததால் உயிருக்கு ஆபத்து இன்றி தப்பியுள்ளார். ஆனால் தலைகீழாக விழுந்ததில் அந்த இளைஞரின் கழுத்துப் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்துள்ளார். இதனால் உடனே அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Tags : #BUNGEE JUMP #POLAND #SPINE #MAN