‘இந்திய அணியின் தேர்வுக் குழுவுக்கு’... ‘இவர்தான் சரியான தலைவர்’... ‘வீரேந்திர சேவாக் அதிரடி’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Sangeetha | Aug 22, 2019 11:31 AM
இந்திய அணியின் சுழற்பந்து ஜாம்பவானாக திகழ்ந்த அனில் கும்ப்ளே, தேர்வுக்குழு தலைவராக இருக்க வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக எம்எஸ்கே பிரசாத் உள்ளார். இவரது தலைமையிலான தேர்வுக்குழுவின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இந்நிலையில் புதிய தேர்வுக்குழு நிமிக்கப்பட வேண்டும். பிரசாத் தலமையிலான உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே விமர்சனம் எழும்பிய வண்ணம் உள்ளன. இதற்கு எம்எஸ்கே பிரசாத் பதிலடி கொடுத்து வருகிறார்.
இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு அனில் கும்ப்ளே சரியான நபராக இருப்பார் என்று நினைக்கிறேன். சச்சின், கங்குலி, டிராவிட் போன்றோர்களுடன் கும்ப்ளே ஒரு வீரராகவும், இளைஞர்களிடம் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்.
2007-08-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரின்போது, கேப்டனாக இருந்த கும்ப்ளே என்னுடைய அறைக்கு வந்து, நீங்கள் அடுத்த இரண்டு தொடரில் அணியில் இருந்து நீக்கப்பட மாட்டீர்கள் என்றார். இதுபோன்ற நம்பிக்கை அளிக்கும் பதில் வீரர்களுக்கு தேவை. தேர்வுக்குழு உறுப்பினருக்கான சம்பளத்தை அதிகரிக்க பிசிசிஐ முன்வரவேண்டும். அப்படி செய்தால் ஏராளமானோர் ஆர்வம் காட்டுவார்கள்’ என்றார்.
