‘ப்ரண்ட்ஸ் கிட்ட சவால் விட்டு 130 அடி உயர பாலத்தில் இருந்து குதித்த நபர்..! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Selvakumar | Jul 29, 2019 04:46 PM

நண்பரகளிடம் சவால் விட்டு பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்த நபரின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

WATCH: Man jumps 130 foot Croatian bridge breaks pelvis

குரோஷியாவின் சைபனிக் என்னும் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நண்பர்களிடம், ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள க்ரோடியன் (Croatian) என்னும் உயரமான பாலத்தில் இருந்து குதிப்பதாக சவால் விட்டுள்ளார். இதனை அடுத்து சுமார் 130 அடி உயரம் உள்ள பாலத்தில் இருந்து எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் அந்த இளைஞர் குதித்துள்ளார்.

வேகமாக தண்ணீரில் விழுந்ததில் அந்த இளைஞரின் இடுப்பு எலும்பு உடைந்துள்ளது. இதனை அடுத்து அந்த இளைஞரின் நண்பர்கள் மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்து வந்த மீட்பு படையினர், இடுப்பு எலும்பு உடைந்த இளைஞரை ஆற்றில் இருந்து பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Tags : #MAN #JUMPS #CROATIAN #BRIDGE #PELVIS