'அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது’.. 'புரியலன்ற சோமாரிகளுக்கு'.. வைரலாகும் கமலின் புதிய ட்வீட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | May 17, 2019 06:46 PM
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மிக அண்மையில், கோட்சேவை இந்து மதத்தின் முதல் தீவிரவாதி என விமர்சித்ததும், தொடர்ந்து தன்னை காந்திய வழியில் நிற்பவராகவும் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை இணையத்தில் வலம்வருகிறது.
அந்த அறிக்கை:
சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர். மக்கள் எடுத்து விட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர, தடை செய்ய முடியாது. 12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ, ‘இந்து’ என்கின்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தாராலோ 'இந்து' என நாமகரணம் செய்யப்பட்டோம்.
ஆண்டு, அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர். நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும்பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் ‘பெயராக’, ‘மதமாக’ கொள்வது எத்தகைய அறியாமை..
நாம் ‘இந்தியர் ’ என்கிற அடையாளம் சமீபத்தியதுதான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது. நாம், நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக/அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பிழையான தேர்வாகும்.
புரியலன்ற சோமாரிகளுக்கு... ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கின்றோம். ‘கோடி’ன்ன உடனே ‘பணம்’ ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல. அரசியல்வாதி அல்ல. வெறும் வியாதி!! தமிழா - நீ தலைவனாக வேண்டும். இதுவே என் வேண்டுகோள்.
— Kamal Haasan (@ikamalhaasan) May 17, 2019
