'கமல் அப்படி என்ன பேசினாரு'?... வெகுண்டெழுந்த 'பாஜக'... வைரலாகும் கமலின் பேச்சு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | May 13, 2019 03:13 PM
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்,நடைபெற இருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.இதற்காக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அவர்,பேசிய கருத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மே.19ஆம் தேதி நடைபெற உள்ள 4 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிடுகிறது.அதில் ஒரு தொகுதியான அரவக்குறிச்சியில் நேற்றிரவு நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.அப்போது பேசிய அவர் 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே' என கூறினார்.மேலும் பேசிய அவர் 'முஸ்லீம்கள் நிறைய பேர் இருக்கும் இடம் என்பதனால் இதை சொல்லவில்லை, காந்தியின் சிலைக்கு முன்னாள் இதை சொல்கிறேன். நான் காந்தியின் மானசீக கொள்ளுப்பேரன். அந்த கொலைக்கு நீதி கேட்க வந்திருக்கிறேன் நான். அப்படி நினைத்துக்கொள்ளுங்கள்'என பேசினார்.
இந்நிலையில் கமல் கூறிய கருத்துக்கள் பாஜக தலைவர்களை கொதிப்படைய செய்துள்ளது.'மத உணர்வுகளை தூண்டி கலவரத்தை உண்டாக்க நினைக்கிறார் கமல்ஹாசன்.எனவே அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதேபோல்,பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பதிவில், முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி மக்கள் நீதி மய்யம். முஸ்லிம் ஓட்டுக்காக இந்துக்களை இழிவு படுத்தும் செயலைப் பாருங்கள். திருப்புவனம் இராமலிங்கத்தின் படுகொலையை கண்டிக்கதா கோழை என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல் தீவிரவாதி இந்து
— Vignesh Theni (@Vignesh_twitz) May 13, 2019
உண்மையான முஸ்லீம்கள் தீவிரவாதத்தை ஏற்க மாட்டார்கள்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து.
அவர் பெயர் நாதுராம் கோட்சே
- கமலஹாசன் @ikamalhaasan @maiamofficial @sugamadrasi @MandviSharma @drmahendran_r @sripriya pic.twitter.com/lqNO7pfB80
