‘கோலிக்கு அடுத்து, அந்த இடத்தை நிரப்ப சரியான சாய்ஸ் யாரு தெரியுமா?’.. பிரபல வீரர் அதிரடி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Arunachalam | Apr 30, 2019 12:58 PM

இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் விராட் கோலிக்கு பின் அந்த இடத்தை நிரப்பும் தகுதி யாருக்கு இருக்கிறது என விண்டீஸ் ராட்ஷசன் கிறிஸ் கெயில் கணித்துள்ளார்.

Gayle suggested him that he will replace the kholi place after him

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இளம் வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஜாம்பவானாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கரின் இடத்தை பூர்த்தி செய்துள்ளார்.

இதனையடுத்து விராட் கோலி தலைமையில் அடுத்த மாதம் இங்கிலாந்தில் தொடங்கவுள்ள 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் தொடரை இந்தியா சந்திக்கவுள்ளது. மேலும் இந்த உலககோப்பை தொடரை வெல்லும் ரேஸில் இந்திய அணியும் ஒன்று என கிரிக்கெட் வல்லுனர்கள் கணித்துள்ளனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் கோலிக்கு அடுத்தது யார் என்று விண்டீஸ் ராட்ஷசன் கிறிஸ் கெயில் கணித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் இந்திய கிரிக்கெட் அணியில் கோலி இடத்துக்கு மிகச்சரியானவர் கே.எல்.ராகுல் தான் என்று கூறியுள்ளார்.

மேலும், கோலிக்கு பின் நீண்ட நாட்கள் இந்திய அணிக்கு சேவை செய்யும் தகுதியும், திறமையும் ராகுலுக்கு இருக்கிறது. ஆனால் இப்போதே அந்த நெருக்கடியை அவர் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றும் விண்டீஸ் ராட்ஷசன் கிறிஸ் கெயில் கூறியுள்ளார்.

Tags : #VIRATKOHLI #ICCWORLDCUP2019 #WESTINDIES #INDIA