மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாக்களித்தார்.. இயந்திரம் பழுதானதால் காத்திருந்து வாக்குப் பதிவு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Sangeetha | Apr 18, 2019 09:44 AM
சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தார்.
மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கியது. மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 13 மாநிலங்களில் 97 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறும் அனைத்து இடங்களிலும் காலை 7 மணி முதல் வாக்கு பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அவரது மகள் ஸ்ருதிஹாசன் ஆகியோர் வாக்களிக்க வந்தனர். ஆனால் அந்த வாக்குச்சாவடியில் வாக்கு இயந்திரம் பழுதானதால் பொதுமக்கள் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட அனைவரும் வரிசையில் காத்திருந்தனர்.
பின்னர் 27-ம் எண் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தொடங்கியப் பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து கமல்ஹாசன் மற்றும் அவரது மகள் ஸ்ருதிஹாசன் வாக்களித்தனர்.