வயசு 18 தான்.. அதனால என்ன?.. 'திருமணத்துக்கு' ரெடியான 'பிரபல' கிரிக்கெட் வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Oct 31, 2019 08:37 PM

பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் குறித்து முதலில் கிசுகிசு வரும். பின்னர் தங்களது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள். ஆனால் அது எதுவும் இல்லாமல் வெறும் 18 வயதிலேயே நிச்சயதார்த்தம் முடித்து திருமணத்திற்கும் ஒரு வீரர் தயாராகி விட்டார்.

Afghanistan spin sensation Mujeeb Ur Rahman gets engaged

ஆமாம். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் தான் அந்த வீரர். கடந்த திங்கள்கிழமை இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக ஆப்கானிஸ்தான் பத்திரிக்கையாளர் எம்.இப்ராஹிம் மொமண்ட் தெரிவித்து இருக்கிறார். மேலும் அவருடைய புதிய வாழ்க்கைக்கும் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்த பதிவுக்கு கீழே ஒருவர் வெறும் 18 வயதிலா? என்று கேட்க, ஆமாம். ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை இதுதான் சரியான வயது என்று இப்ராஹிம் பதிலளித்து இருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் பஞ்சாப் அணிக்காக முஜீப் தற்போது விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #CRICKET #IPL