டாஸ்மாக்கில் பரபரப்பு! சக டேபிள் மேட் பைக்கை திருடிய இளைஞர்.. சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு உதவி கோரிய நபர்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுபான கடையில் எதிரே வந்து மது குடித்த நபர் செய்த விஷயம் தொடர்பான செய்தி தற்போது இணையத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் புத்தாண்டை முன்னிட்டு பாண்டிகோ அருகே உள்ள மதுபானக் கடை ஒன்றில் மது குடிக்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது தனது பைக்கை மதுபான கடையில் வெளியே நிறுத்தி வைத்து விட்டு அங்குள்ள மதுபான கடையில் மது அருந்த சென்றுள்ளார் கருப்பையா.
அப்போது அங்கே இளைஞர் ஒருவர் கருப்பையாவின் மேஜைக்கு எதிரே உட்கார்ந்தபடி அவருடன் நன்கு பேசிக் கொண்டே இருந்துள்ளதாகவும் கூறுகின்றது. இதனை தொடர்ந்து அந்த இளைஞர் திடீரென வெளியே செல்வதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். அவர் புறப்பட்டு சென்ற கொஞ்ச நேரம் கழித்து கருப்பையாவும் கிளம்பி செல்ல, தனது பைக்கை எடுக்க சென்றுள்ளார்.
ஆனால் அப்போது தான் அவருக்கு கடும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. தான் பைக் நிறுத்திய இடத்தில் பைக் காணாமல் போனதால் அதிர்ந்து போய் உள்ளார் கருப்பையா. தனது பைக் எங்கே போயிருக்கும் என்பதை அறிவதற்காக மதுபான கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை பார்த்துள்ளார். அப்போது தனக்கு எதிரே அமர்ந்து மது அருந்திக்கொண்டு தன்னுடன் பேசிக்கொண்டு இருந்த இளைஞர் தனது பைக்கை எடுத்துச் செல்வதும் தெரிய வந்துள்ளது.
இதனைக் கண்டதும் இன்னும் பதறிப் போன கருப்பையா, காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் ஒன்றையும் அளிக்க சென்றதாக சொல்லப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் கருப்பையா பைக்கை இளைஞர் எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் தற்போது இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் மத்தியில் அதிக வைரலாகி வருகிறது. தனது பைக்கை கண்டுபிடித்து தரும் படியும் பலரிடம் உதவி கோரவும் செய்துள்ளார் அந்த வாலிபர்.

மற்ற செய்திகள்
