JALLIKATTU : “என் காளை தோத்துருச்சு!”.. கலங்கிய ‘குட்டி அன்னலட்சுமி’.. “சரி இந்தா என் பரிச நீயே வெச்சுக்க” - நெகிழவெச்ச மாடுபிடி வீரர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாடுபிடி வீரர், போட்டியில் தான் வென்ற பரிசுகளை மாடுவளர்த்த சிறுமிக்கு பரிசாக அளித்துச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் பொங்கல் சமயத்தில் வருடாவருடம் நடத்தப்படும் எறுதழுவுதல் என அழைக்கப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மிகவும் புகழ்பெற்ற ஒன்றாக விளங்கி வருகிறது. அங்குதான் விஜய் என்பவர் காளையை அடக்கி, அந்த வீர விளையாட்டில் வெற்றி பெற்றார்.
முன்னதாக மாடும் லேசில் விட்டுக் கொடுக்காமல் தான் ஜெயிக்க போராடியது. டஃப்பான இந்த பொட்டியில் இறுதியில் விஜய், காளையை அடக்கி வென்றார். ஆனால் அப்போது தன் காளை தோற்றுப்போன ஏக்கத்தில் சிறுமி ஓரமாக நிற்க, அதை பார்த்த அந்த வீரர் விஜய், தான் ஜெயித்த பரிசை அச்சிறுமியிடமே ஓடிச்சென்று கொடுத்து இன்ப அதிர்ச்சி தந்ததாக கூறப்படுகிறது.
சுமார் 3 வருடங்களாக அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்று வரும் விஜய், தொடர்ந்து பயிற்சி எடுப்பதாகவும் மின் துறையில் பணிபுரிவதாகவும் குறிப்பிட்டு, தனக்கு இந்த வெற்றி மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
