இந்தியில் பேசிய மதுரை ஏர்போர்ட் CRPF மீது நடிகர் சித்தார்த் குற்றச்சாட்டு.. MP சு. வெங்கடேசன் பரபரப்பு ட்வீட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்திய சினிமாவில் பிரபல நடிகனாக வலம் வருபவர் நடிகர் சித்தார்த்.

Also Read | பதவியை புடுங்கிட்டாங்க.. KL ராகுலுக்கு அதிர்ச்சி அளித்த BCCI.. இலங்கை தொடருக்கு புதிய துணைக் கேப்டன்!
நடிகர் சித்தார்த், பாய்ஸ், ஆயுத எழுத்து, ஜிகிர்தண்டா, தீயா வேலை செய்யனும் குமாரு, காவியத்தலைவன், சிவப்பு மஞ்சள் பச்சை, ரங்தே பசந்தி உள்ளிட்ட படங்களில் நடித்தவர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிரபலமான நடிகராக வலம் வருபவர். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் மதுரை விமான நிலையத்தில் நடிகர் சித்தார்த் & அவரின் பெற்றோர்களை விமான நிலையத்தில் உள்ள சி.ஆர்.பி.எப் வீரர்கள் துன்புறுத்தியதாக நடிகர் சித்தார்த் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘‘கூட்டமில்லாத மதுரை விமான நிலையத்தில் கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு மேல் எங்களை CRPF வீரர்கள் துன்புறுத்தினர்.
என் வயதான பெற்றோரின் பைகளில் இருந்து நாணயங்களை எடுக்கும்படி சொன்னார்கள். அவர்களிடம் நாங்கள் ஆங்கிலத்தில் பேச சொன்னபோதும் அவர்கள் இந்தியிலேயே எங்களிடம் பேசினார்கள்.
இதற்கு நாங்கள் ஆட்சேபம் தெரிவித்தபோது "இங்கு இப்படி தான் இருக்கும்" என்று கூறினர். வேலையில்லாதவர்கள் அதிகாரத்தை காட்டுகிறார்கள்’’ என்று நடிகர் சித்தார்த் பதிவிட்டிருந்தார்.
சித்தார்த்தின் இந்தப் பதிவு குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "மதுரை விமானநிலையத்தில் CISF வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு
குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென மதுரை விமான நிலைய அதிகாரிகளிடம் கோரியுள்ளேன்." என்று ட்வீட் செய்துள்ளார்.
மதுரை விமானநிலையத்தில் CISF வீரர்கள் ஹிந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக
திரைக்கலைஞர் சித்தார்த் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு
குறித்து உரிய விசாரனை மேற்கொள்ள வேண்டுமென @aaimduairport கோரியுள்ளேன்.#Siddharth #Actor #Tamil #StopHindiImposition pic.twitter.com/TjpUJRQBgd
— Su Venkatesan MP (@SuVe4Madurai) December 28, 2022
Also Read | யாருமே எதிர்பார்க்கல.. ஷிகர் தவானுக்கு BCCI கொடுத்த ஷாக்.. சோகத்தில் ட்வீட் செய்யும் ரசிகர்கள்!

மற்ற செய்திகள்
