'ஆட்சி அமைக்க போவது யார்?'... 'உற்சாகத்தில் திமுகவினர்'... ஸ்டாலின் வீடு தற்போது எப்படி இருக்கு?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலைப் பிடிக்கப் போவது யார் என்பதற்கான விடை இன்று தெரிந்து விடும்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. ஆரம்பம் முதலே தபால் ஓட்டுகளில் திமுக முன்னிலை பெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி 125 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதில் திமுக 106 இடங்களிலும் காங்கிரஸ் 7, மதிமுக-2 , சிபிஎம்-3, சிபிஐ-2, விசிக-4, பிற 1 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன.
இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவரும், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான மு.க.ஸ்டாலின் முன்னிலை பெற்றுள்ளார். கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய சட்டமன்ற தேர்தல்களில் அங்குப் போட்டியிட்ட ஸ்டாலின் வெற்றி பெற்றார். இதையடுத்து தற்போது கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாகக் களம் கண்டிருக்கிறார். முக்கிய முதல்வர் வேட்பாளரான மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் முதன்மையான நட்சத்திர தொகுதியாகக் கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே திமுக முன்னிலை பெற்று வருவது திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. ஸ்டாலின் வீடு அமைந்துள்ள தேனாம்பேட்டை காலை முதல் சற்று அமைதியான சூழ்நிலையே நிலவி வருகிறது. மதியத்திற்குப் பிறகு ஓரளவிற்கு நிலைமை மாறும் என்பதால் அதைப் பொறுத்தே தொண்டர்களின் மனநிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.