'மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை'... பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 2 அலுவலகம் உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழக சட்டசபைத் தேர்தல் வருகிற 6-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 2 அலுவலகம் உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். திமுகவின் தேர்தல் பிரசாரத்தை சபரீசன் கவனித்து வருவதாகக் கூறப்படும் நிலையில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது.
ஏற்கனவே திமுக வேட்பாளர் எ.வ.வேலுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர். இந்த சூழ்நிலையில் தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

மற்ற செய்திகள்
