'தம்பி, உன் போனை கொடு'... 'டேய், தம்பி மொபைல் பாஸ்வேர்ட் என்ன டா'... 'பிரச்சாரத்தின் போது நடந்த சுவாரசியம்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரச்சாரத்தின் போது, செல்ஃபி எடுக்கச் சொன்ன இளைஞர்களை உதயநிதி ஸ்டாலின் கலாய்த்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சூறாவளி சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், பலரும் தங்களின் பிரச்சாரத்தை முன்னெடுக்கத் தொடங்கி விட்டார்கள். அந்த வகையில் திமுகவின் ஸ்டாலின், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காங்கேயத்தில் நேற்று உதயநிதி பிரச்சாரம் மேற்கொண்டார். அவர் தனது பிரச்சார வாகனத்தில் பேசிக் கொண்டே வந்த பொழுது, அங்குக் கூடிய இளைஞர்கள் அவரிடம் செல்பி எடுக்க வேண்டி தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். உடனே மொபைல் கொடுங்க என்று உதயநிதி கேட்க, பலரும் தங்கள் மொபைலை அவரிடம் கொடுக்க முயற்சி செய்தனர். அப்போது இளைஞர் ஒருவர் உதயநிதியை நோக்கி தனது மொபைலை வீசினார். அதை தவறாமல் பிடித்து விட்ட உதயநிதி, போட்டோ எடுக்க முயற்சி செய்தார்.
ஆனால் அதில் பாஸ்வேர்டு போடப்பட்டிருந்த நிலையில், பாஸ்வேர்டு எங்க?' என்று சிரித்துக் கொண்டே கேட்ட உதயநிதி, அவரை அடிப்பது போல், 'இந்தா வச்சிக்க போனை தூக்கிப் போட்டுட்ட, பாஸ்வேர்ட் இல்லாம நா எப்படி போட்டோ எடுக்குறது' என்று கிண்டல் செய்தார். பின்னர் மற்றொரு நபரிடம் இருந்து மொபைல் வாங்கி செல்ஃபி எடுத்த உதயநிதி, நான் உங்களை எல்லாம் பார்த்து பேசிட்டு போக வந்தா என்ன ஃபோட்டோகிராஃபர் ஆக்கிட்டீங்களே, என ஜாலியாக சொல்ல அந்த இடமே சிரிப்பலையில் மூழ்கியது.
காங்கேயத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் அங்கு கூடியிருந்த இளைஞர்களுடன் ஜாலியாக பேசினார்.
— Vimal Ravishankar #TNNEXTCMMKS (@VimalRavishank1) February 16, 2021
இந்த மாதிரியான சகஜமான போக்கு மக்களிடம் திமுக மேல் உள்ள மரியாதையை மேலும் மெருகேற்றும். @Udhaystalin - 🖤❤️@IlovemyNOAH2019 @isai_ #Winning_RisingSun pic.twitter.com/T7PPgQFtx8

மற்ற செய்திகள்
