"எனக்காக இதை செய்வீங்களா?".. கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு சிறுமி எழுதிய உருக்கமான லெட்டர்.. காரணத்தை கேட்டு உடைஞ்சுபோன நெட்டிசன்கள்..!
முகப்பு > செய்திகள் > உலகம்கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு சிறுமி ஒருவர் எழுதிய உருக்கமான கடிதம் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

Also Read | மனைவிக்காக நடுராத்திரி பூஜை.. கணவர் செஞ்ச பகீர் காரியம்.. சுற்றி வளைத்த போலீஸ்..!
பொதுவாக கிறிஸ்துமஸ் நெருங்கிவிட்டாலே கிறிஸ்துமஸ் தாத்தாவிற்கு குழந்தைகள் கடிதம் எழுதும் மரபு பல ஆண்டுகளாக பல்வேறு தேசங்களில் பின்பற்றப்பட்டு வருகிறது. குழந்தைகள் தங்கள் கடிதங்கள் சாண்டாவைச் சென்றடையும் என்று நம்புகிறார்கள். அவர்கள் நன்றாக நடந்து கொண்டால் அவர்களின் விருப்பம் நிறைவேறும் எனவும் அந்த கடிதங்களில் தங்களுக்கான பொம்மைகள் உள்ளிட்ட பொருட்களை கேட்டு விண்ணப்பமும் செய்வார்கள். ஆனால், இங்கிலாந்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவரின் கடிதம் பலரையும் கண்கலங்க செய்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சாண்டாவுக்கு தனது சகோதரி மகள் எழுதிய கடிதத்தின் படத்தை சமீபத்தில் இங்கிலாந்து பெண் ஒருவர் பகிர்ந்துள்ளார். அவர் தனது ட்வீட்டில், ''எனது சகோதரி, சாண்டாவுக்கு தனது 8 வயது மகள் எழுதிய இந்தக் கடிதத்தை வீட்டில் கண்டுபிடித்துள்ளார். இவ்வளவு இளவயதில் அவள் இதுபற்றி யோசிப்பதை நினைத்து என் கண்கள் கலங்கிவிட்டன" எனக் குறிப்பிட்டுள்ளார்.
உருக்கமான கோரிக்கை
வழக்கமாக குழந்தைகள் பொம்மைகளை கேட்டு சாண்டாவிற்கு கடிதம் எழுதும் நிலையில் இந்த சிறுமி சாண்டாவிடம் தனது அம்மா மற்றும் அப்பாவின் பண தேவைக்கு உதவுமாறு கேட்டிருக்கிறார். கடன் காரணமாக இருவரும் மன அமைதி இல்லாமல் இருப்பதாகவும் ஆகவே அவர்களுக்கு உதவும்படியும் அந்த சிறுமி சாண்டாவிற்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.
அந்த சிறுமி எழுதிய கடிதத்தில்,''சாண்டாவிடம், கிறிஸ்துமஸுக்கு நான் விரும்புவது மம்மி மற்றும் டாடிக்கு கொஞ்சம் பணம் மட்டுமே. அவர்கள் பில்கள் மற்றும் கடன்களுடன் போராடுகிறார்கள். நான் கூட வருத்தப்படுகிறேன். ப்ளீஸ், ப்ளீஸ் சாண்டா உங்களால் இதைச் செய்ய முடியுமா? இது அதிகம் தான் என்று எனக்குத் தெரியும். இதற்காக நான் வருந்துகிறேன் லவ் எம்மி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதம் இணைய தளங்களில் வைரலாக பரவி வருவதுடன் பலரும் சிறுமியின் குணம் குறித்தும் பெற்றோரின் சிரமத்தை போக்க நினைக்கும் அவரது மனது பற்றியும் சிலாகித்து எழுதி வருகின்றனர். இன்னும் சிலர் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை டேக் செய்து இந்த குடும்பத்தினருக்கு உதவுமாறும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
My Sister has just found this letter to Santa, written by her 8 year old Daughter. It’s made me cry a lot to think that someone so young is even thinking about this! 😢 pic.twitter.com/GT4c5i8O3Q
— Nicole Connell (@BradsMrs) November 24, 2022

மற்ற செய்திகள்
