'சீட்டுக்கு அடியில இருந்த சின்ன பார்சல்...' 'பார்சலுக்குள்ள இருந்த 3 பல்லு...' இது எதோட பல்லு...? என்ன பண்வாங்க...? - அதிர வைக்கும் பின்னணி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று (20.12.2020) துபாயிலிருந்து எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் வந்திறங்கியது. அதையடுத்து விமான நிலைய ஊழியர்கள் விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுப்படுகையில் விமானத்தின் ஒரு சீட்டிற்கு அடியில் ஒரு சிறிய பார்சல் கைப்பட்டப்பட்டது.
உடனடியாக இதுகுறித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தவுடன், அதிகாரிகள் விரைந்து வந்து அந்த பார்சலை திறந்து பார்த்தனர். அப்போது அந்த பார்சலில், 3 சிறுத்தை புலியின் பற்கள் இருந்தன. அதோடு சிறுத்தையின் நகங்கள், எலும்பு துண்டுகள் அடங்கிய தூள்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த சம்பவம் குறித்து, பாதுகாப்பு அதிகாரிகள் சுங்கத்துறைக்கு தகவல் கொடுத்தத்தின் பெயரில், கைப்பற்றப்பட்ட பொருட்களை ஆய்வு செய்துவிட்டு,சென்னையில் உள்ள வனவிலங்குகள் குற்றத்தடுப்பு பிரிவுக்கு தெரிவித்தனர்.
அதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், சிறுத்தைபுலி, பற்கள், நகம், எலும்பு தூள்களை கைப்பற்றி, தாம்பரத்தில் உள்ள வன விலங்குகள் ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
இதுமாதிரியான சிறுத்தை புலி நகம், பல் போன்றவைகளை செயின் டாலர்களில் பதித்து வைத்து அணிந்து கொண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்ற நம்பிக்கை உள்ளவர்களிடம் விற்க கொண்டுவரப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் வரை போகும் எனவும் அதற்காக கடத்தி வரப்பட்டவையாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.