'மேடம் லைவ் போயிட்டு இருக்கு'... 'நேரலையில் நடந்த எதிர்பாராத சம்பவம்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > உலகம்நேரலையில் செய்தி வாசிக்கும் போது எதிர்பாராமல் நடக்கும் சில நிகழ்வுகள் தர்மசங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தும். அதுபோன்ற ஒரு நிகழ்வு தான் தற்போது வைரலாகி வருகிறது.

உக்ரைனைச் சேர்ந்த செய்தி வாசிப்பாளர் மரிச்கா படால்கோ. இவர் நேரலையில் பரபரப்பாகச் செய்தியை வாசித்துக் கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அவரது முன் பல் விழுந்தது. இதனை உணர்ந்த மரிக்சா தன் கையில் பல்லை எடுத்துக்கொண்டு வழக்கமான முக பாவனைகளுடன் செய்தியைத் தொடர்ந்து வாசித்து முடித்தார். அதே நேரத்தில் உடைந்து பல் தெரியும்படியும் அவர் செய்தியை வாசிக்காமல் சமாளித்து வாசித்தார்.
செய்தியை நேரலையில் பார்த்துக்கொண்டிருந்த பலருக்கு என்ன நடந்தது என்று கூட தெரியவில்லை. அதன்பிறகு அதுகுறித்த வீடியோ வைரலானதையடுத்து தான் பலருக்கும் இதுகுறித்து தெரியவந்தது. நேயர்கள் பலரும் செய்தி வாசிப்பாளருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். அந்த நேரத்தை மிகவும் சாதுரியமாகச் சமாளித்ததாகப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்துப் பேசிய மரிச்கா, 10 வருடங்களுக்கு முன்பு இரும்பு கடிகாரத்தால் தன் மகள் தாக்கியதில் பாதிக்கப்பட்ட பல் அது. என்னுடைய 20 வருடச் செய்தி வாசிப்பாளர் பயணத்தில் இது ஒரு ஆர்வமான அனுபவம் எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
