'ஆப்பிள் வைத்த செக்!'.. ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்டது மட்டுமில்ல, விஸ்ட்ரான் எடுத்த ‘அந்த’ பரபரப்பு முடிவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாதைவான் விஸ்ட்ரான் நிறுவன இந்தியப் பிரிவுதலைவர் பதவி நீக்கம் செய்யப் பட்டிருப்பதுடன் ஊழியர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது விஸ்ட்ரான் நிறுவனம். ஊழியர்களுக்கு முறையான ஊதியம், பதவி உயர்வு உள்ளிட்டவை வழங்கப்படாததால், இந்த பிரச்சனை எழுந்த நிலையில், ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரான் ஆலை, ஆப்பிள்-ஐ போனுக்கான உதிரி பாகங்கள் சப்ளை செய்வதில் முன்னணி வகிக்கிறது. இந்நிறுவன ஊழியர்கள் தங்களுக்கான ஊதியம் சரியாக வழங்கப்படவில்லை என கூறி நடத்திய போராட்டம் காரணமாக ஆப்பிள் நிறுவனம், விஸ்ட்ரானிடம் இருந்து உதிரி பாகங்கள் வாங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இப்பிரச்சனைக்கு சுமுக தீர்வு காண விஸ்ட்ரான் நிறுவனம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கண்காணித்து, அதன் பின் புதிய ஆர்டர்கள் தருவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே சமயம் ஊழியர்கள் போராட்டத்தின்போது சேதப்படுத்திய பொருட்களால், 71 லட்சம் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டதால், முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு வராத வகையில் தீர்வு காணவும் வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில் விஸ்ட்ரான் நிறுவனம், இப்பிரச்சனைக்கு காரணமாக இருந்த துணைத் தலைவரை பதவியில் இருந்து நீக்கியுள்ளதுடன், இப்பிரச்சினை குறிந்து ஆராய்ந்து எதிர்காலத்தில் இதுபோன்ற தகவல்கள் நடக்காமல் நடவடிக்கைகள் எடுக்கப்படவும், ஊழியர்களுக்கும் உரிய ஊதிய இழப்பீடு வழங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாநில குழு மேற்கொண்ட ஆய்வு முடிவின்படி, இந்த ஆலையில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பணி புரிய அனுமதி பெற்றிருந்த நிலையில், விதிகளை மீறி 10,500 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.