'எந்த நேரமும் வரலாம்'!.. அவசர அவசரமாக தயார் படுத்தப்படும் விமான நிலையங்கள்!.. 'கொரோனாவுக்கு 'ஏழரை' ஸ்டார்ட் ஆயிடுச்சு'!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தடுப்பூசிகளை வினியோகிக்க டெல்லி, ஐதராபாத் விமான நிலையங்கள் தயார் படுத்தப்பட்டுள்ளன.

தடுப்பூசிகளை சேமித்து வைக்கும் வகையில் 25 டிகிரி செல்சியஸ் முதல் மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலை கொண்ட குளிர்சாதன கிட்டங்களில் இரு விமான நிலையங்களிலும் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதே போன்று விமானங்களுக்கு தடுப்பூசிகளை கொண்டு செல்ல நகரும் குளிர்சாதன பெட்டிகள் தயார் நிலையில் உள்ளன. இதனால் தடுப்பூசிகள் வெளி வெப்பநிலையால் பாதிக்கப்படாமல் சேமித்து விமானங்களில் ஏற்றி இறக்க முடியுமென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தடுப்பூசிகளை விமான நிலையத்தில் இருந்து வெளியே எடுத்துச் செல்ல தனி வழி உருவாக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது சரக்கு சேவை பிரிவில் தடுப்பூசிகளை கொண்டு செல்ல தேவையான குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

மற்ற செய்திகள்
