‘வயத்துல ‘கட்டி’ன்னு’ ... ‘செக்’ பண்ணி பாத்ததுல’... ‘அதிர்ந்து போன சிறுமியின் பெற்றோர்...!’ அடுத்துடுத்து கைதான ‘55 வயது’ நபரும், ‘மணமேடையில்‘ காத்திருந்த மாப்பிள்ளையும்!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம் அருகே குண்டலப்பட்டி என்னும் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி பத்தாம் வகுப்பு வரை தனது தாய் மாமன் வீட்டில் தங்கிப் படித்து வந்துள்ளார்.

தொடர்ந்து, தனது தாய் வீட்டிற்கும், தாய் மாமன் வீட்டிற்கும் சிறுமி மாறி மாறிச் சென்று தங்கி வந்துள்ள நிலையில், சிறுமியின் வயிறு பெரிதாகியுள்ளது. வயற்றில் ஏதோ கட்டி இருப்பதாக நினைத்து சிறுமியின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிறுமிக்கு பரிசோதனை நடத்திய போது அவர் 8 மாத கர்ப்பமாக இருந்த தகவல் சிறுமியின் குடும்பத்தாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிறுமிக்கு என்ன நடந்தது என்பது குறித்து, விசாரித்ததில் கடந்த 10 மாதங்களில் 3 பேர் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், சிறுமியின் குடும்பத்தினரை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அந்த சிறுமி தனது தாய் மாமன் வீட்டில் தனியாக இருந்த போது, அப்பகுதியை சேர்ந்த கூட்டுறவு சங்க முன்னாள் ஊழியரான உதயணன் என்பவர், குடி போதையில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதே போல, அப்பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் தான் சிறுமி கர்ப்பமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உதயணனை பிடித்து அப்பகுதி மக்கள் விசாரித்த நிலையில், அவர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதை ஒப்புக் கொண்டுள்ளார். பின்னர், அவர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். தொடர்ந்து, இரண்டு இளைஞர்களில் ஒருவருக்கு கடந்த வியாழக்கிழமை திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மணமேடையில் வைத்து அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
தற்போது காப்பகம் ஒன்றில் சிறுமி உள்ள நிலையில், அவரது கருவை கலைப்பது சிறுமியின் உயிருக்கு ஆபத்தாக முடியும் என்பதால் மருத்துவர்களின் ஆலோசனைகளை கேட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
