"தாய்லாந்து மன்னரின் காதலியின் 1,400 நிர்வாண படங்கள்!".. ‘எதிரிகளின் சதியா?’.. அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம்! நடந்தது என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஏற்கனவே சர்ச்சைக்கு பேர் போனவர் தாய்லாந்து மன்னர். 67 வயதான மன்னர் மகா வஜிரலோங்கார்ன் தாய்லாந்து வரலாற்றில், 100 ஆண்டுகளில் முதல் முறையாக அதிகாரப்பூர் காதலி பதவியை சினீநாட் வோங்வாஜிரபக்தி எனும் தனது பாதுகாவலரான 35 வயதுடைய பெண்ணுக்கு அளித்தபோது
![King of Thailand mistress 1,400 naked photos leaked by her enemies King of Thailand mistress 1,400 naked photos leaked by her enemies](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/king-of-thailand-mistress-1400-naked-photos-leaked-by-her-enemies.jpg)
உலகமே அதிர்ந்தது.
ஆனால், அக்டோபர் மாதம் மன்னர், ராணியான சுதிடாவின் (43) இடத்தை சினீநாட் கைப்பற்ற முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, சிறையில் அடைக்க உத்தரவிட்டார். எனினும் சுதிடா கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுவதற்குள் மீண்டும் சீனிநாட் விடுவிக்கப்பட்டு மன்னரின் அழகிகள் படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
இந்நிலையில் தான், சினீநாட்டுடைய நிர்வாண படங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவைகள் ஆண்ட்ரூ மேக்ரிகோர் மார்ஷல் எனும் இங்கிலாந்து பத்திரிகையாளருக்கு அனுப்பப் பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தாய்லாந்து மன்னர் வஜிரலோங்க்கார்னை ஏற்கனவே தம் பத்திரிகைகளின் மூலம் விமர்சித்து வந்த ஆண்ட்ரூவுக்கு இந்த படங்கள் அனுப்பப்பட்டதுடன், தாய்லாந்தைச் சேர்ந்த பாவின் சச்சவல்பொங்பன் என்கிற கல்வியாளருக்கும் சேர்த்து அந்த படங்கள் அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
மன்னரை விமர்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து இவரும் ஜப்பானுக்கு சென்றவர் என்பதும், அதனால் இந்த படங்கள் இவருக்கு அனுப்பப் பட்டதாகவும் கருதப்படுகிறது. ராணியின் இடத்தை குறிவைப்பதாக குற்றம் சாட்டப்பட்டு மன்னரால் சிறைக்கு அனுப்பப் பட்ட சீனிநாட் மீண்டும் விடுவிக்கப்பட்டு, பின், மன்னரின் அவையில் இணைந்துள்ள நிலையில், இவ்வாறான செயல் நடந்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)