கொரோனா அறிகுறியுடன் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டினர்.. ஈரோட்டில் அதிர்ச்சி..! போலீசார் அதிரடி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 07, 2020 02:43 PM

கொரோனா தொற்றுடன் ஈரோட்டில் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டினரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Erode police case filed against six Thailand tourists

தாய்லாந்து நாட்டை சேர்ந்த 6 பேர் சுற்றுலா விசா மூலம் ஈரோடு வந்து, முறையான அனுமதியின்றி பொள்ளம்பாளையம் பகுதியில் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் அவர்களிடம் விசாரனை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தாய்லாந்து நாட்டை சேர்ந்த 6 பேரும் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த சிலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் மீது வட்டாட்சியர் பரிமளா தேவி சூரம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் பொதுமக்களுக்கு நோய் தொற்று பரவ காரணமாக இருந்தது, பாஸ்போர்ட் விதிமீறல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.