'பாத்ரூம்' சென்ற 'இளைஞர்'... சிறிது நேரத்தில் கேட்ட 'அலறல்' சத்தம்... அவரோட 'அந்த இடத்துல'... அதிர்ச்சியை ஏற்படுத்திய 'சம்பவம்'!!!
முகப்பு > செய்திகள் > உலகம்தாய்லாந்து நாட்டின் அமைந்துள்ள நொந்தபுரி (Nonthaburi) என்னும் பகுதியில், 18 வயது இளைஞர் ஒருவர் தனது வீட்டின் கழிவறைக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து தனது மொபைல் போன் பயன்படுத்திக் கொண்டிருந்த நிலையில், திடீரென அவரது பிறப்புறுப்பில் அதிக வேதனை ஏற்பட்டுள்ளது. என்னவென்று கீழே பார்த்த இளைஞருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. கழிவறையில், குட்டி மலைப்பாம்பு (Python) ஒன்று இருப்பதைக் கண்டு அந்த இளைஞர் பதறி ஓடியுள்ளார். அந்த பாம்பு கடித்ததில், இளைஞரின் பிறப்புறுப்பு நுனியில் காயம் ஏற்பட்டு, அவரது கால் மற்றும் தொடைப் பகுதிகளில் முழுவதுமாக ரத்தம் வழிந்தோடியுள்ளது.
உடனடியாக, இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு வைத்து அவருக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. முதலில் ஆன்டிபயாடிக் (antibiotic) மூலம் பாக்டீரியாக்கள் அகற்றப்பட்ட நிலையில், பிறப்புறுப்பின் நுனியில் மூன்று தையல்கள் போடப்பட்டது. தற்போது, அந்த இளைஞர் சிறந்த முறையில் உள்ளதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
சுமார் 4 அடி நீளமுள்ள அந்த மலைப்பாம்பை மீட்டு காட்டுப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, இளைஞரின் தாயார் கூறுகையில், 'எங்களது வீட்டிற்குள் பாம்பு எப்படி வந்தது என்றே தெரியவில்லை. ஒரு வேளை, எங்களது டாய்லெட்டில் இணைக்கப்பட்டுள்ள கால்வாய் மூலம் அது உள்ளே நுழைந்திருக்கலாம்' என்றார். மேலும், அந்த பாம்பு அதிகம் விஷத்தன்மை இல்லாததால் இளைஞர் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.