‘அவரோட வழி எப்போதும்'... 'தனி வழியாக இருக்கத்தான் வாய்ப்பு’... ‘நடிகர் ரஜினி குறித்து கருணாஸ்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 23, 2019 05:29 PM

நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு எம்.எல்.ஏ கருணாஸ் பதிலளித்துள்ளார்.

karunas says actor rajinikanth will not join any party

அக்டோபர் 30-ம் தேதி பசும்பொன்னில் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதையொட்டி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில், முதலமைச்சர் பழனிச்சாமியை சந்தித்து, விழாவில் கலந்துகொள்ள எம்.எல்.ஏ. கருணாஸ் அழைப்பு விடுத்தார். இதையடுத்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும் அவர் அழைப்பு விடுத்தார்.

பின்னர் நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், ‘ரஜினியுடன் குறுகிய கால பழக்கம் மட்டுமே இருந்தாலும், நெருங்கிப் பழகியுள்ளேன். அவர் தனியாக கட்சி தொடங்குவாரே தவிர, வேறு ஒரு கட்சியில் இணைந்து கூட்டணி வைக்கமாட்டார்‘ என்று தெரிவித்தார்.

Tags : #RAJINIKANTH #KARUNAS #POLITICIAN #MLA