'அப்போ.. பாஜகவுல சேர்ந்தா'.. 'முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா ரஜினி?'.. பொன்.ராதாகிருஷ்ணனின் பதில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 22, 2019 01:55 PM

நடிகர் ரஜினிகாந்த் பாஜகவில் சேரவேண்டும் என்று தான் விரும்புவதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார்.

I Wish Rajinikanth to join BJP,Says Pon Radhakrishnan

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் நடிகர் ரஜினிகாந்த் ஒரு அரசியல் கட்சியை துவக்கினாரானால், நிச்சயமாக மகிழ்ச்சி அடைவதாகவும், பாராட்டு தெரிவிப்பதாகவும் பேசியதோடு தன்னுடைய விருப்பம் ரஜினிகாந்த் பாஜகவில் சேர வேண்டும் என்பதே என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் நிறைவு விழாவையொட்டி, வேலூர் காட்பாடியில் பா.ஜ.க சார்பில் சமூக விழிப்புணர்வு பாத யாத்திரையில் கலந்துகொண்டு பேசியபோது, ரஜினிகாந்த் பாஜகவில் இணைந்தால் அவர் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ரஜினி பா.ஜ.க-வுக்கு வந்த பிறகு அதுகுறித்து முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார்.

Tags : #BJP #NARENDRAMODI #RAJINIKANTH #PONRADHAKRISHNAN #TNPOLITICS