காயத்தால் தீபக் சஹாருக்கு வந்த சோதனை.. பறிபோகும் மிகப்பெரிய வாய்ப்பு? கசிந்த தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரை தொடர்ந்து டி20 உலகக்கோப்பை தொடரிலும் தீபக் சஹார் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read | ‘இப்படி பண்ணிட்டோமே’.. சோகமாக உட்கார்ந்த சூர்யகுமார்.. அப்போ பொல்லார்டு செய்த செயல்.. மனுசன் வேறலெவல்யா..!
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 4 போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது மீண்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ராயல் சேல்ஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி தனது முதல் வெற்றி கணக்கை தொடங்கியுள்ளது.
சென்னை அணியின் தொடர் தோல்விகளுக்கு வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் இல்லாதது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த தீபக் சஹார் இந்த மாத இறுதியில் சிஎஸ்கே அணியில் இணைவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக வலைப்பயிற்சியையும் அவர் தொடங்கியிருந்தார்.
இந்த சூழலில் திடீரென முதுகு பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரால் சரியாக பந்து வீச முடியவில்லை என தகவல் வெளியானது. இந்த காயம் குணமடைய சில மாதங்கள் ஆகும் என்பதால் ஐபிஎல் தொடரில் விளையாடுவது கேள்குறியாகியுள்ளது. இது சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தீபக் சஹாருக்கு ஏற்பட்டுள்ள முதுகு வலி பிரச்சினை சரியாக குறைந்தது 4 மாதங்கள் ஆகும் என பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதனிடையே வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. ஆனால் காயம் காரணமாக தீபக் சஹார் ஓய்வில் இருப்பதால், டி20 உலகக்கோப்பை தொடரில் அவர் விளையாட வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது.
Also Read | ரோகித் சர்மாவுக்கு சோதனை மேல் சோதனை.. ‘இதோட ரெண்டாவது தடவை’.. ஐபிஎல் நிர்வாகம் அதிரடி ஆக்ஷன்..!

மற்ற செய்திகள்
