தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவர்.. விபரீத முடிவெடுத்த மனைவி.. கோபத்தில் டிராக்டர் எடுத்துக்கிட்டு காதலன் செஞ்ச காரியம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கள்ளக்காதல் விவகாரத்தில் நண்பன் மீது டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
"அங்க சட்டை, வேட்டியெல்லாம் கிழியுது..".. ராகுல் காந்தி பேச்சுக்கு அண்ணாமலை பரபரப்பு பதில் பேச்சு..!
தேனி
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் தங்க ரமேஷ் (வயது 32). இவர் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி கம்பம் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது எதிரே வந்த டிராக்டர் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி தங்க ரமேஷை கீழே விழுந்துள்ளார்.
டிராக்டர்
அப்போது டிராக்டர் ஓட்டி வந்த நபர் உடனே கீழே இறங்கி, தான் வைத்திருந்த மரக்கட்டையால் தங்க ரமேஷை சரமாரியாக தாக்கியுள்ளார். பட்டப்பகலில் அவர் மீது நடத்தப்பட்ட கொலை வெறித்தாக்குதலை கண்ட அப்பகுதியினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
படுகாயம்
இதனிடையே படுகாயமடைந்த தங்க ரமேஷை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 5 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்த தங்க ரமேஷ் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
போலீசில் சரண்
இதனை அடுத்து தங்க ரமேஷ் கொலை சம்பவம் தொடர்பாக காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த அசன் குமார் (வயது 28) என்பவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
நண்பன் மனைவி
அதில், தங்க ரமேஷும், அசன் குமாரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இதில் தங்க ரமேஷுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த சூழலில் அசன் குமாருக்கு தங்க ரமேஷின் மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் தங்க ரமேஷிக்கு தெரிந்ததால், அவரது மனைவி கடந்த ஜனவரி மாதம் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
கள்ளக்காதல்
இதனால் தங்க ரமேஷுக்கும், அசன் குமாருக்கும் இடையே பகை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே இருசக்கர வாகனத்தில் வந்த தங்க ரமேஷ் மீது அசன் குமார் கொலை வெறித்தாக்குதல் நடத்தியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அசன் குமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். நண்பனின் மனைவியுடன் கள்ளத்தொடர்பில் கணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.