நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த முன்னாள் MI வீரர்.. வருங்கால மனைவியுடன் நேரில் போய் வாழ்த்திய CSK வீரர்.. வைரல் போட்டோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர் தனது நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் கடந்த சில ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பாக சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சஹார் விளையாடினார். அப்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு இந்திய அணியில் விளையாட இடம் கிடைத்தது. இதனை அடுத்து நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரிலும் இடம் பெற்றிருந்தார்.
இந்த சூழலில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி மீண்டும் ராகுல் சஹாரை எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை வாங்கியுள்ளது. வரும் 26-ஆம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்க உள்ளது. அதனால் அதற்கு முன்பாகவே ராகுல் சஹார் தனது திருமணத்தை முடித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான இஷானி உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இருவருக்கு இன்று (10.03.2022) திருமணம நடந்துள்ளது. கோவாவில் நடைபெற்ற திருமண விழாவில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டுள்ளனர். தனது திருமண புகைப்படங்களை ராகுல் சஹார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் வெளியிட்டுள்ளார். பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராகுல் சஹாரின் சகோதரரும் சிஎஸ்கே வீரருமான தீபக் சஹார் தனது வருங்கால மனைவியுடன் சென்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ராகுல் சஹார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் போது தனது தோழியிடன் தீபக் சஹார் காதலை வெளிப்படுத்தியிருந்தார். இது அப்போது சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
