வேட்டி சட்டையில் ’சிங்கநடை’ போடும் தோனி & கோ – CSK அணி பகிர்ந்த MASS PIC!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனி உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்களின் வித்தியாசமான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது சிஎஸ் கே அணி நிர்வாகம்
Also Read | காயத்தால் தீபக் சஹாருக்கு வந்த சோதனை.. பறிபோகும் மிகப்பெரிய வாய்ப்பு? கசிந்த தகவல்..!
தோனி கேப்டன்சி இலலாத சிஎஸ்கே…
இதுவரை நடந்துள்ள 14 ஐபிஎல் சீசன்களில் 12 சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடியுள்ளது. அந்த தொடர்களில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்து வந்துள்ளது. அதற்கு அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் ஒரு காரணமாக இருந்து வந்தார். அந்த அணி விளையாடிய 12 சீசன்களிலும் அவரே கேப்டனாக செயல்பட்டார். இதுவரை 4 முறை கோப்பையை சிஎஸ்கே கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் அணிக்குள் ஒரு வீரராக தொடர்ந்து விளையாடி வருகிறார்.
தோனிக்குப் பின் தலைமையேற்ற ஜடேஜா…
தோனியின் இந்த முடிவு ஐபிஎல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியான செய்தியாக அமைந்தது. இதன் பிறகு சி எஸ் கே அணிக்கு கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் பதவியை விட்டு விலகியுள்ளதால் தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்குமோ என்ற சந்தேகங்களும் எழுந்தன. ஆனால் அதை மறுத்துள்ள சிஎஸ்கே அணியின் CEO காசி விஸ்வநாதன் ”தோனி தொடர்ந்து விளையாடுவார்” என்று கூறியுள்ளார்.
தொடர்தோல்வியும் ஆறுதல் வெற்றியும்…
இந்நிலையில் புதுத்தலைமையோடு களமிறங்கிய சென்னை அணிக்கு மோசமான ஆரம்பமாக அமைந்தது. முதல் நான்கு போட்டிகளையும் தோற்று புள்ளிப்பட்டியலின் கடைசி இடங்களில் இருந்தது. சமீபத்தில் பெங்களூர் அணிக்கு எதிரான ஐந்தாவது போட்டியில் வென்று முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன் பின்னராவது தொடர்ந்து வெற்றிப்பாதையில் பயணிக்கும் என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சி எஸ் கே அணி பகிர்ந்த வாழ்த்தும் புகைப்படமும்…
இந்நிலையில் இன்று தமிழகத்தில் சித்திரை திருநாள் (தமிழ்ப் புத்தாண்டு) கொண்டாடப்படும் நிலையில் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தமிழ்நாட்டின் பாரம்பரிய உடைகளான வேட்டி சட்டையில் தோனி, பிராவோ, உத்தப்பா மற்றும் ஜடேஜா ஆகியோர் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது சிஎஸ்கே அணி நிர்வாகம். மேலும் அந்த புகைப்படத்தோடு “புதிய தொடக்கங்களுக்கான சிங்கநடை. நிறைய மங்களகரமான மற்றும் சூப்பர் டூப்பர் தருணங்களுக்காக” எனக் கூறியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read | “ஜெயிக்கிற நேரத்துல தேவையில்லாம அப்படி செஞ்சிருக்க கூடாது”.. சீனியர் வீரரை மறைமுகமாக சாடிய ரோகித்..!