‘பார்ட்னருடன் பாலியல் ரீதியாக உறவு கொள்பவர்கள் இதை கடைபிடியுங்கள்!’.. கனடா சுகாதார அதிகாரி சொன்ன 'வேற லெவல்' அட்வைஸ்!
முகப்பு > செய்திகள் > உலகம்ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதை அடுத்து ஒவ்வொரு நாட்டிலும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை அனைத்து நாட்டு அரசுகளும் முன்னெடுத்து வருகின்றன.
அந்தவகையில் கனடாவும் சில அவசரமான முன்னெடுப்புகளை முயற்சித்து வருகிறது. இந்த நிலையில் கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரியும், உயர் மருத்துவருமான theresa tam கடந்த புதன்கிழமை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி உடல் அளவில் உறவு கொள்பவர்கள் நெருக்கமாக இருக்கும்போதும், முத்தம் கொடுக்கும் போதும், நேருக்கு நேர் நெருங்கும் பொழுதும் வாய், மூக்கை மறைக்க வசதியாக மாஸ்க் அணிய சொல்லி அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக முத்தம் கொடுத்துக்கொள்வதை தவிர்க்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் எந்த ஒரு பாலியல் செயலுக்கும் முன்னால், சக பார்ட்னருக்கும் தமக்கும் அறிகுறிகள் இருக்கிறதா என பரிசோதனை செய்து கொள்ளவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.