இவங்க தான் இந்த தடவ 'ஐ.பி.எல்' ஜெயிக்கப் போறாங்க,,.. 'பிராட்' ஹாக் சொன்ன 'பதில்',,.. கமெண்டில் ரவுண்டு கட்டிய 'ரசிகர்கள்',,. காரணம் 'என்ன'?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Sep 03, 2020 05:32 PM

கொரோனா தொற்று காரணமாக, இந்தாண்டு நடைபெறவிருந்த ஐ.பி.எல் போட்டிகள்  ஐக்கிய அரபு அமீரகத்தில் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

csk supporters mock brad hogg for not choose csk will win ipl2020

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாஃக், தனது ட்விட்டர் பக்கத்தில் #AskHoggy என்ற ஹேஸ்டேக் மூலம் ரசிகர்கள் கேள்வி கேட்கலாம் என தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, ரசிகர் ஒருவர் இந்தாண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டித் தொடரில் எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த ஹாக், பெங்களூர், மும்பை அல்லது கொல்கத்தா அணிகளில் ஒரு அணி கோப்பையை கைப்பற்றும் என பதிலளித்திருந்தார்.

இதுவரை நடைபெற்றுள்ள ஐ.பி.எல் போட்டிகளில் தாங்கள் கலந்து கொண்ட அனைத்து தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் பிளே ஆஃப் சுற்று வரை தகுதி பெற்றுள்ளது. அதே போல, 3 முறை ஐ.பி.எல் கோப்பையையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கைப்பற்றியுள்ளது. ஐ.பி.எல் தொடர்களில் சிறந்த அணியான சென்னை அணியின் பெயரை பிராட் ஹாக் குறிப்பிடாத காரணத்தால் பல கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை அணிக்கு ஆதரவாக ரீப்ளே செய்து வருகின்றனர்.

உங்களின் இந்த பதிலை சேவ் (save) செய்து வைத்து விட்டு, சென்னை அணி கோப்பையை கைப்பற்றியதும் உங்களிடம் இதனை காண்பிப்போம்' என ஒரு ரசிகர் குறிப்பிட்டிருந்தார். அதே போல, மேலும் சிலர் நீங்கள் சிஎஸ்கே அணியை குறிப்பிடவில்லை என்றும், யார் ஜெயிக்கப் போகிறார்கள் என பார்க்கத் தான் போகிறோம் என்றும் தெரிவித்து வருகின்றனர். 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Csk supporters mock brad hogg for not choose csk will win ipl2020 | Sports News.