என்னால அந்த வீட்ல வந்து 'வாழ' முடியாதுங்க...! 'வெளியே நின்னுட்டு இருந்த ஸ்கூட்டி...' - உச்சக்கட்ட கடுப்பில் கணவன் செய்த காரியம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வீட்டுக்கு அழைத்தும் வராத மனைவியின் பைக்கை தீ வைத்து கொளுத்திய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேடவாக்கம் கூட்ரோடு பகுதியில் வசித்து வருபவர் 29 வயதான சத்தியசீலன். தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர் சங்கீதா (25) என்பவரை திருமணம் செய்துள்ளார்.
இவர்களின் 7 வருட திருமண வாழ்க்கையில் அடிக்கடி கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்படுமாம். அப்போதெல்லாம் சங்கீதா அவரின் தாய் வீட்டுக்கு செல்வதையும் மீண்டும் சண்டை முடிந்தவுடன் கணவரின் வீட்டுக்கு வந்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் சங்கீதா கடந்த மாதம் தன் கணவன் மீது சந்தேகப்பட்டு பெரும்பாக்கம் வனத்துறை குடியிருப்பில் இருக்கும் தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஒரு மாதகாலம் ஆகியும் மனைவி வீட்டுக்கு வராத காரணத்தால் கவலை அடைந்த சத்தியசீலன் பல முறை மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியிடம் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
ஆனால், சங்கீதா இதையெல்லாம் மறுத்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவும் சத்தியசீலன் மனைவியை அழைக்க பெரும்பாக்கம் சென்றுள்ளார். அப்போதும் சங்கீதா கணவருடன் வீட்டிற்கு வர மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சத்தியசீலன் தனது மனைவியின் இருசக்கர வாகனத்தை தீவைத்து கொளுத்தினார். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் நிகழாத நிலையில் சங்கீதாவின் வண்டி மட்டும் எரிந்து எலும்புக்கூடானது.
தன் கணவரின் செயல் குறித்து சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் பெரும்பாக்கம் போலீசார், சத்தியசீலனை காவல் நிலையம் அழைத்துவந்து விசாரித்து வருகின்றனர்.
இதுமாதிரியான, மனக்கசப்பில் தொடங்கும் குடும்ப உறவுகள் ஒருக்கட்டத்தில் வன்முறையாக வெடிக்கிறது. அதிலும் கணவன் மனைவி உறவில் ஏற்படும் விரிசல் அதனால் விவாகரத்து உள்ளிட்ட சிக்கல்கள் சமூகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எல்லாவித உறவுகளிலும் சிக்கல்கள் நிலவி வந்தாலும் கணவன் மனைவி உறவுக்கும் வரும் சிக்கல், மனக்கசப்பு நுட்பமானது. அதை கையாள முறையான ஆலோசனை பேர வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. அதன் மூலம் மட்டுமே வன்முறை அளவிற்கு செல்லாமல் பரஸ்பரம் ஒருவரையொருவர். புரிந்துக் கொள்ள முடியும்.

மற்ற செய்திகள்
