VIDEO: ‘காதலியுடன் கையும் களவுமாக சிக்கிய கணவன்’.. நடுரோட்டில் அடித்து துவைத்த மனைவி.. அதிர்ச்சி வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகணவருடன் தகாத உறவில் இருந்த பெண்ணை மனைவி நடுரோட்டில் அடித்து துவைத்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள ஹோட்டலில் இருந்து நபர் ஒருவர் தனது காதலியுடன் வெளியே வந்துள்ளார். அப்போது கார் ஒன்றுக்கு பின் மறைந்திருந்த அந்த நபரின் மனைவி வேகமாக ஓடி வந்து கணவனின் காதலியை சரமாரியாக தாக்க ஆர்ம்பித்துள்ளார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத கணவர், தனது மனைவியிடம் இருந்து காதலியை காப்பாற்ற முயற்சி செய்கிறார். ஆனால் அவரது மனைவி அப்பெண்ணை விடுவதாக இல்லை. அப்போது அங்கு வந்த மகனிடம் தாயை தடுக்குமாறு அந்த நபர் கூறுகிறார். உடனே இந்த பிரச்சனையில் தலையிட வேண்டாம் என அப்பெண் ஆவேசமாக காத்துகிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. ஆனால் இதுதொடர்பாக எந்தவித புகாரும் இதுவரை பதிவாகவில்லை என கிரந்தி சௌக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கணபத் தராதே தெரிவித்துள்ளார். லாசூர் ஸ்டேஷன் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
