இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jan 17, 2020 10:38 AM

1. ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில் 48-வது ஓவரில் ஸ்டார்க் வீசிய பந்தை ராகுல் அடிக்க, அப்போது ஜடேஜா ஓடும்போது பிட்ச்களில் ஓடியதால் இந்திய அணிக்கு 5 ரன்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கின் போது 5 ரன் என்ற தொடக்கத்தோடு களமிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதன்பின்னர் எதேச்சையாக ஓடியது தெரியவந்ததால், அந்த அபராதம் நீக்கப்பட்டது.

January 17th One line news in One minute read her for more

2. நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குத் தண்டனையை வரும் பிப்ரவரி மாதம் 1-ம் தேதி காலை 6 மணிக்கு நிறைவேற்ற பாட்டியாலா நீதிமன்றம் புதிய வாரண்டை பிறப்பித்துள்ளது. 

3. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கி வந்த கேலரியை இனி போராட்ட மாணவர்கள் கேலரி என போராட்டத்தின் போது அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த கேலரியில் மாணவர்கள் மட்டும் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்ட நிலையில் இந்த ஆண்டு அந்த கேலரி தமிழக சுற்றுலாத்துறைக்கு ஒதுக்கப்பட்டு வெளிநாட்டினர் மட்டும் பார்வையிட அனுமதிக்கப்பட்டது.

4. ஜல்லிக்கட்டுக்காகவும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்காகவும் போராடும் இளைஞர்கள், மாணவர்கள் விவசாயத்தைப் பாதுகாக்க முன்வர வேண்டும் என திரைப்பட நடிகர் கார்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

5. குடியரசு தினத்தன்று மாபெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீநகர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

6. பேச்சுவார்த்தைகள் மூலம் பிரச்னைகளை தீர்ப்பது தான் இந்தியாவின் பாணி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

7. அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தொடங்கி வைத்த ஜல்லிக்கட்டில், சுகாதாராத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் 3 காளைகளும் களம் கண்டன. நின்று விளையாடிய அமைச்சரின் சின்னகொம்பன் காளை, காளையர்களிடம் சிக்கமால் மிரட்டல் காட்டியது.

8. காணும் பொங்கலை ஒட்டி மெரினா கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா போன்ற இடங்களில் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

9. பெட்ரோல் விலை 15 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.78.34 ஆகவும், டீசல் விலை 16 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.72.67 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

10. திரையுலகில் மட்டும் நான் கதநாயகன் இல்லை, அரசியலிலும் கதாநாயகன் என்று நிருபித்த மாபெரும் சகாப்தம் எம்.ஜி.ராமச்சந்திரன் 103-வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

Tags : #MGR #VIRATKOHLI #VIJAYABASKAR #CRICKET #POLITICS #BIRTHDAY