'வீட்டுக்கு போய் பத்திரமா இருங்க' ... வெளியில் சுற்றி திரிந்த மக்களை ... 'பூ'ன்னகையுடன் வீட்டிற்கு அனுப்பிய போலீசார்
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியில் வாகனத்தில் வெளியில் சுற்றிய நபர்களிடம் பூவை அன்பளிப்பாக அளித்து வீட்டில் தங்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள வேண்டி இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில், இன்று நாடு முழுவதும் பல பகுதிகளில் ஆள் நடமாட்டங்கள் இல்லாமல் அனைவரும் வீட்டிலேயே தங்கி மத்திய அரசின் உத்தரவிற்கு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.
இருப்பினும் சில பேர், வாகனங்களில் பொதுவெளிகளில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி மாநிலத்தின் முக்கிய சாலைகளில் வாகனம் ஒட்டி வரும் நபர்களிடம், அங்கு பணியிலுள்ள போலீசார், பூவை அன்பளிப்பாக அளித்து அவர்களை வீட்டில் தங்கி சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.
Delhi: Police personnel near Barakhamba road offer flowers to the locals out on roads, requesting them to stay at home and observe the countrywide #JanataCurfew today. #COVID19 pic.twitter.com/SdHy8Vqgms
— ANI (@ANI) March 22, 2020