'கோழி கொண்டை ஹேர் ஸ்டைலை ஒட்ட நறுக்கிய இன்ஸ்பெக்டர்'... 'வைரலான வீடியோ'... இன்ஸ்பெக்டருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோழி கொண்டை ஹேர் ஸ்டைலுடன் சிறுவன் சுற்றித் திரிந்த வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பூசாரிப்பட்டி பகுதியில் மஹராஜா கடை காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ்குமார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் சிறுவன் சுற்றிக் கொண்டு இருந்துள்ளான். இதைப் பார்த்த காவல் ஆய்வாளர் கணேஷ்குமார், அந்த சிறுவனை அழைத்து விசாரித்துள்ளார்.
அப்போது அந்த சிறுவன் காதில் கடுக்கன் அணிந்துகொண்டு, வித்தியாசமான கோழிக்கொண்டை ஹேர்ஸ்டைல் வைத்திருந்தான். படிக்கின்ற வயதில் இதுபோன்ற ஹேர் ஸ்டைல் அவசியமா எனக் கடிந்து கொண்ட அந்த இன்ஸ்பெக்டர், உடனே சிறுவனை சலூன் கடைக்கு அழைத்துச் சென்று சிறுவனின் முடியை ஒழுங்காக வெட்டி அனுப்பச் சொல்லியுள்ளார்.
அதேபோன்று சலூன் கடைக்காரரும் சிறுவனுக்கு முடி வெட்டி அனுப்பியுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் 15 வயது சிறுவனின் முகத்தை வீடியோ எடுத்து வெளியிட்டதற்குப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து நடந்த சம்பவம் குறித்து விசாரித்த அவர், 15 வயது சிறுவனை அழவைத்து அந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டதற்காக இன்ஸ்பெக்டர் கிருஷ்ண குமாரை ஆயுதப் படைப் பிரிவிற்கு மாற்றி எஸ்பி கங்காதர் உத்தரவிட்டார்.