'தமிழகத்தில்' 1372 பேருக்கு 'கொரோனா' தொற்று...' 'சென்னையில்' மொத்தம் '235 பேர்' பாதிப்பு... இன்று (ஏப். 18) 'வெளியான லிஸ்ட்...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Apr 18, 2020 08:32 PM

தமிழ்நாட்டில் இன்று (ஏப்.18) 5,363 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் புதிதாக 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

In tamilnadu 1372 people infected with coronavirus-new list

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1372 ஆக உயர்ந்துள்ளது. 82 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 283-ல் இருந்து 365 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.1 சதவீதம் என்ற நிலையில் உள்ளது. தமிழகத்தில் இதுவரை 35,036 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட வாரியாக (ஏப். 18) கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,

சென்னை – 235 (07 today)

கோயம்புத்தூர் – 128 (01 today)

திருப்பூர் – 108 (28 today)

ஈரோடு – 70

திண்டுக்கல் – 69 (03 today)

திருநெல்வேலி– 60 (02 today)

செங்கல்பட்டு – 50

நாமக்கல் – 50

திருச்சி - 46

திருவள்ளூர்- 46

மதுரை – 44

தேனி – 43

கரூர – 42

நாகப்பட்டினம் – 40

ராணிப்பேட்டை - 39

தஞ்சாவூர்- 36 (01 today)

தூத்துக்குடி – 26

விழுப்புரம் – 26

சேலம் – 24

வேலூர் – 22

திருவாரூர் – 21

கடலூர் – 20

தென்காசி – 18 (04 today)

திருப்பத்தூர் – 17

விருதுநகர் – 17

கன்னியாகுமரி – 16

திருவண்ணாமலை– 12

சிவகங்கை– 11

ராமநாதபுரம் – 10

நீலகிரி – 09

காஞ்சிபுரம்– 08

பெரம்பலூர் - 04 (03 today)

கள்ளக்குறிச்சி– 3

அரியலூர் – 2