இன்னும் 2 நாள்ல 'கம்பெனி' ஓபன் ஆகலேன்னா... 'சம்பளத்தை' கட் பண்ணிருவோம்... ஊழியர்களுக்கு 'செக்' வைத்த 'முன்னணி' நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > ஆட்டோமொபைல்ஸ்

By Manjula | Apr 18, 2020 03:03 AM

ஏப்ரல் 20 முதல் தொழிற்சாலைகள் இயங்காவிட்டால், ஊழியர்களின் சம்பளத்தில் 10% பிடித்தம் செய்யப்படும் என பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

COVID-19: Bajaj Auto proposes 10% salary cut for Staff

கொரோனா தொற்றால் கடந்த 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. தொடர்ந்து கொரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வரவில்லை என்பதால் வருகின்ற மே மாதம் 3-ம் தேதிவரை மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் ஏப்ரல் 20 முதல் தொழிற்சாலைகள் இயங்காவிடில் ஊழியர்களின் சம்பளத்தில் 10% பிடித்தம் செய்யப்படும் என பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. அதே நேரம் தொழிற்சாலைகள் இயங்கினால் சம்பள பிடித்தம் இருக்காது என கூறியுள்ளது.

இதற்கிடையில் சில தொழில்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வருகின்ற திங்கட்கிழமை(ஏப்ரல் 20) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.