மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த தினக்கூலி தமிழகத்தில் உயர்த்தப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு என்ற 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இந்த திட்டத்தின் கீழ் ஏரிகள், குளங்கள், ஆறுகள், வாய்கால்க்களை தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்யும் நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு 229 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் 100 நாள் வேலை உறுதி திட்ட தினக்கூலி 229 ரூபாயில் இருந்து 256 ரூபாய் ஆக உயர்த்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
Tags : #TAMILNADU #MGNREGA