ஊரடங்கால் 'காண்டம்' மட்டுமில்ல... 'இந்த' விற்பனையும் படுஜோரா நடக்குதாம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு தழுவிய ஊரடங்கால் தம்பதிகள் மத்தியில் ரொமான்ஸ் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.
கொரோனா பரவலை தடுக்க உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டாலும் தம்பதிகள் மத்தியில் ரொமான்ஸ் அதிகரித்து இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிகின்றன.
ஊரடங்கின் தொடக்கத்தில் ஸ்டாக் இல்லை என்று சொல்லும் அளவிற்கு காண்டம் விற்பனை படுஜோராக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது கருத்தடை மாத்திரைகள், கர்ப்ப பரிசோதனை கருவிகள் விற்பனை 50% அளவுக்கு உயர்ந்து இருக்கிறதாம்.
இதுகுறித்து பெங்களூரை சேர்ந்த மெடிக்கல் நிறுவனம் ஒன்றின் ஊழியர் கூறும்போது, '' ஊரடங்கிற்கு முன் கருத்தடை மாத்திரைகள் விற்பனை 14-15 பெட்டிகள் என்றளவில் இருந்தது. தற்போது அது 25 பெட்டிகளாக உயர்ந்துள்ளது. கர்ப்ப பரிசோதனை கருவிகளின் விற்பனையும் தற்போது 3 மடங்கு உயர்ந்துள்ளது,'' என தெரிவித்து இருக்கிறார்.