'மருத்துவர்களின் ஷூக்கள்' கூட 'கொரோனாவைப்' பரப்பலாம்... 'காற்றில்' 12 அடி வரை வைரஸ் 'பரவும்'... 'அச்சுறுத்தும் புதிய ஆய்வு முடிவுகள்...'

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Apr 15, 2020 07:06 PM

காற்றில் 12 அடி தூரம் வரை கொரோனா வைரஸ் பரவும் எனறும், மருத்துவர்களின் ஷுக்கள் கூட கொரோனா வைரசைப் பரப்பலாம் என்றும் புதிய ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

corona virus can travel upto 12 feet in air says new research

கொரோனா வைரஸ் காற்றில் பரவாது என மருத்துவர்கள் கூறி வந்த நிலையில், தற்போது காற்றிலும் வைரஸ் பரவும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நோயாளியிடமிருந்து கொரோனா வைரஸ் எவ்வளவு தூரம் வரையில் காற்றில் பரவக்கூடும் என்பது குறித்த ஆய்வொன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அந்த ஆய்வின் முடிவில், கொரோனா நோயாளி ஒருவரிடமிருந்து 13 அடிதூரம் அதாவது 4 மீட்டர் தொலைவு வரையில் கொரோனா காற்றில் பரவக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு முன் சீன அரசு மேற்கொண்ட ஆய்வில் 6 அடி தூரம் வரை வைரஸ் பரவ வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதனைக் கருத்தில் கொண்டே நம் அரசு நம்மை சமூக இடைவெளி 6 அடி இடைவெளி விட்டு நிற்கச் சொல்லி அறிவுறுத்துகிறது. ஆனால் தற்போது இருமடங்கு தூரத்திற்கு வைரஸ் பரவும் என புதிய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, வுஹானைச் சேர்ந்த ஒரு மருத்துவமனையில் ஐ.சி.யூ வார்டு மற்றும் ஜெனரல் வார்டுகளில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளிகள் மத்தியில் இந்த ஆய்வைச் செய்துள்ளனர். ஆய்வின் முடிவில், நோயாளிகள் இருக்கும் அறைகளின் தரைதளத்தில் வைரஸ் கிருமிகள் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

இதற்கு புவிஈர்ப்பு விசை காரணமாக இருக்கக்கூடும் என அனுமானிக்கப்பட்டது. தரைதளத்தை நோக்கி இந்த வைரஸ் வேகமாகப் பரவுகிறது என்பதால், மருத்துவர்களின் ஷூக்களில் இந்த வைரஸ் அதிகம் படர்ந்துவிடுவதாகக் கூறப்படுகிறது. மருத்துவர்களின் ஷூக்கள் மூலமாகவே இந்த வைரஸ் பெரும்பாலான பகுதிகளுக்கு கடத்தப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவரின் ஷூ கூட, வைரஸ் கேரியராகச் செயல்படும் என ஆய்வு கூறுகிறது. அப்படியானால், ஒருமுறை பயன்படுத்திய ஷூவை, மறுமுறை அவர்கள் உபயோகப்படுத்தக்கூடாது.

களத்தில் நின்று வேலை பார்க்கும் மருத்துவர்களுக்கும் அவர்களின் பணியாளர்களுக்கும், மூன்றடுக்குக் கவசங்கள் ஒவ்வொரு நாளுக்கும் ஒன்றென்ற விகிதத்தில் தரப்பட வேண்டும். ஒருமுறை உபயோகப்படுத்திய எதையும் அவர்கள் மீண்டும் உபயோகப்படுத்த அனுமதிக்கக்கூடாது. ஆனால் இது அனைத்துமே சாத்தியமற்ற நிலையில்தான் இருக்கின்றன. இவையாவும் நடக்க வேண்டுமென்றால், நம்மிடையே அந்தளவுக்கு மருத்துவ வசதிகள் இருக்க வேண்டும். மருத்துவ வசதியை, உறுதிபடுத்த வேண்டியது அரசின் கடமை.