'அரபிக்கடலில் உருவாகும் புயல்...' தமிழகத்துல 'இந்த' 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும்...! - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஅரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் புயல் உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இந்திய வானிலை மையம் தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றமுத்த தாழ்வுப்பகுதி உருவாகி புயலாக மாற வாய்ப்புள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், வரும் மே 14 -ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றமுத்த தாழ்வுப்பகுதி உருவாகி புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று மே 16 -ஆம் தேதி மத்திய அரபிக்கடல் வழியாக செல்கிறது. இந்த புயல் குஜராத் மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கரையைக் கடக்கலாம்.
இதன் காரணமாக லட்சத்தீவுகள் கடலோர மாநிலங்களான கேரளம், கர்நாடகம், கோவா, மகாராஷ்ரம், தென் தமிழ்நாடு ஆகிய இடங்களில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
மேலும், தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சழற்சியின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு கன்னியாகுமரி, நீலகிரி, தென்காசி, நெல்லை ஆகிய 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

மற்ற செய்திகள்
