‘ஆவலோடு காத்திருந்த ரசிகர்கள்’!.. WTC FINAL-ன் முதல் நாளே வந்த சோதனை.. பிசிசிஐ முக்கிய அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மழை காரணமாக தொடங்குவதில் தாமதமாகியுள்ளது.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இன்று (18.06.2021) நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் மோதும் இப்போட்டி, இந்திய நேரப்படி 3:30 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால் திடீரென மழை குறிக்கிட்டதால் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடைபெறும் சவுத்தாம்ப்டனில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் நேற்று முதல் அங்கு கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து இன்றும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.
அதனால் முதல் நாள் ஆட்டத்தின் முதல் செஷன் நடத்தப்பட மாட்டாது என்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி அங்கு பலத்த மழை பெய்யவில்லை. ஆனால் தொடர்ந்து சாரல் மழை நீடிக்கிறது. இது தொடரும் பட்சத்தில் இன்றைய முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
Update: Unfortunately there will be no play in the first session on Day 1 of the ICC World Test Championship final. #WTC21
— BCCI (@BCCI) June 18, 2021

மற்ற செய்திகள்
