'தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை'... 'சென்னைக்கு மழை இருக்கா'?... வானிலை மையம் தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் கோடைக் காலம் ஆரம்பிப்பதற்குள்ளாகவே பல இடங்களில் வெயிலின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் வளிமண்டல மேலடுக்கின் மேற்கு திசை காற்றில் ஏற்பட்டுள்ள சுழற்சி, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்பரப்பில் நிலவும் சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், கடலூர், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடுமெனத் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், 19 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தமிழகத்தின் பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார். மீனவர்கள் கடலுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

மற்ற செய்திகள்
