கேரளா பாம்புக்கடியை மிஞ்சிய குமரி... திருமணமான 6 மாதத்தில் 'மனைவி'யை கொல்ல ஸ்கெட்ச்... மொதல்ல 'ஜூஸ்' அப்புறம் ஊசி...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சில மாதங்களுக்கு முன் கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் உத்ரா என்னும் இளம்பெண்ணை கொலை செய்ய அவரது கணவர் சூரஜ் பாம்பை கடிக்க விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல தற்போது கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் நடைபெற்று இருக்கிறது.
களியக்காவிளை பகுதியை சேர்ந்த ஜாஸ்பின் ஷைனி(30) என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஆண் குழந்தை ஒன்று உள்ளது. முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததால் அவருக்கும் மார்த்தாண்டம் அருகேயுள்ள மெர்லின் ஜெபராஜ்(40) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி 20-ம் தேதி 2-வது திருமணம் நடைபெற்றது. முதல் குழந்தையை தன்னுடன் வைத்துக்கொள்வதாக கூறிய மெர்லின் நாளடைவில் குழந்தை, மனைவி இருவரையும் கொடுமைப்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்.
உச்சகட்டமாக சம்பவ தினத்தன்று ஷைனி மாமியார் அவருக்கு இரவில் ஜூஸ் கொடுக்க அதைக்குடித்த ஷைனி மயங்கி இருக்கிறார். அப்போது அவரது கணவர் மருந்தில்லா ஊசியை அவரது இடுப்பில் 2 முறை குத்தி இருக்கிறார். மறுநாள் காலை பயங்கர இடுப்புவலி ஏற்பட்டுள்ளது. எனினும் ஷைனி அதோடு வேலைகளை செய்துள்ளார். மீண்டும் இருவருக்கும் சண்டை ஏற்பட்டதில் ஷைனி தாய்வீடு சென்றுள்ளார்.
உடல்நிலை சரியில்லாமல் போனதை அடுத்து அங்கு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை செய்த போது, ஜாஸ்மின் ஷைனியின் உடலில் ஊசி மூலம் காற்று செலுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அவர் மாமியார் கொடுத்த ஜூசை குடித்து மயங்கி கிடந்த போது, அவருடைய கணவர் ஜாஸ்மின் ஷைனியின் இடுப்பில் மருந்து எதுவும் இல்லாமல் காற்று அடைக்கப்பட்ட ஊசியை 2 முறை குத்தியுள்ளார்.
அதனால் மாரடைப்பு ஏற்பட வைத்து அவரை கொல்ல சதி நடந்ததாக தெரிகிறது. இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் மெர்லின் ஜெபராஜ், மாமனார் சவுந்தர்ராஜ், மாமியார் ஜெஸ்டின் பாய் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.