ஹை ஜாலியா இருக்கு! காரில் ஏறி 'விளையாடிய' சிறுமிகளுக்கு... திடீரென ஏற்பட்ட துயரத்தால்... 'கதறித்துடித்த' பெற்றோர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காரில் விளையாடிய சிறுமிகளுக்கு ஏற்பட்ட துயரம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் குலதீபமங்களம் பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் தன்னுடைய மாருதி ஷிப்ட் காரை கடந்த 1 வருடங்களுக்கு மேலாக அதே இடத்தில் நிறுத்தி வைத்திருந்தார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர் தன்னுடைய மாருதி காரை கடந்த 1 வருடத்திற்கும் மேலாக நிறுத்தி வைத்திருந்துள்ளார்.
அதே பகுதியை சேர்ந்த ராஜி(7) வனிதா(3) ஆகிய இரண்டு சிறுமிகளும் இன்று மாலை காரில் ஏறி விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். எதிர்பாராத விதமாக கார் கதவு மூடிக்கொண்டது. இதில் இரண்டு சிறுமிகளும் 2 மணி நேரத்திற்கும் மேலாக காருக்குள் சிக்கிக்கொண்டனர். தொடர்ந்து மூச்சுத்திணறியதில் இருவரும் இறந்து போய் விட்டனர்.
சிறுமிகள் இருவரும் காருக்குள் சிக்கியதை பார்த்து அக்கம், பக்கத்தினர் காரை உடைத்து சிறுமிகளை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமிகளை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து இரு சிறுமிகளின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
