‘6 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை’...!! ‘வெளுத்து வாங்கப் போகும் மழை’...!!! ‘வெதர்மேன் சொல்வது என்ன’???
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் அடுத்த 48 மணிநேரத்தில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஈரோடு, கோவை, நீலகிரி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் , திருவாரூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், நீலகிரி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. மதுரை, சிவகங்கை, விருதுநகர், நீலகிரி, ஈரோடு, கோவை ஆகிய 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி வரைக்கும் பருவமழை தீவிரமடையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இன்று சென்னை, பாண்டிச்சேரி, கடலூர், நாகை, திருவாரூர், காரைக்கால், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.