"பெரிய ஏமாற்று வேலை நடக்கிறது!.. வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவேன்!".. கொந்தளித்த டிரம்ப்!.. அமெரிக்க தேர்தலில் பரபரப்பு!.. அதிபர் பதவிக்கு உச்சகட்ட மோதல்!
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் டிரம்ப், டுவிட்டரில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போது முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. 270 இடங்களை கைப்பற்றினால் வெற்றி என்ற நிலையில், 4.11.2020 மதியம் 1.40 நிலவரப்படி, ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் 238 இடங்களை கைப்பற்றி முன்னிலையில் இருக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 213 கைப்பற்றியுள்ளார்.
தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், "நாம் மாபெரும் வெற்றியை எதிர்நோக்கியுள்ளளோம், ஆனால், அவர்கள் தேர்தலில் சதி செய்ய முயற்சிக்கின்றனர். ஒருபோதும் அவர்களை சதி செய்ய விடமாட்டோம். வாக்கு சாவடிகள் மூடப்பட்ட பிறகு வாக்களிக்க முடியாது!" என டிரம்ப் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இப்பதிவை தொடர்ந்து, "நான் இன்று இரவு ஒரு அறிக்கையை வெளியிடுவேன். மாபெரும் வெற்றி!" என டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
எதிர்கட்சிகள் சதி செய்வதாக டிரம்ப் பதிவிட்ட சர்ச்சைக்குரிய டுவிட் நீக்கப்பட்டுள்ளது. அந்த டுவிட்டில் பகிரப்பட்ட தகவல் ட்விட்டர் விதிகளை மீறும் வகையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நிமிடங்களுக்கு முன்னர், அதிபர் டிரம்ப் அனுப்பிய ஒரு டுவீட்டை, டுவிட்டர் ஒரு "சர்ச்சைக்குரியது" என கூறியது. அதில் அவர் "நாங்கள் பெரியவர்கள், ஆனால் அவர்கள் தேர்தலைத் தடுக்க முயற்சிக்கிறார்கள்" என்று ஆதாரமற்ற முறையில் கூறப்பட்டு உள்ளது.
"இந்த ட்வீட்டில் பகிரப்பட்ட அனைத்து உள்ளடக்கங்களும் சர்ச்சைக்குரியவை, மேலும் தேர்தல் செயல்பாட்டில் எவ்வாறு பங்கேற்பது என்பது பற்றி தவறாக வழிநடத்தக்கூடும்" என்று ட்விட்டர் கூறி உள்ளது.
அதையடுத்து, வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் பெரிய மோசடி நடப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், வாக்குகளை எண்ணும் பணியை நிறுத்த உச்ச நீதிமன்றம் செல்வேன் எனவும் டிரம்ப் தெரிவித்துளார். டிரம்பின் இந்த பேச்சு அமெரிக்க தேர்தலில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.